Last Updated:
Fuel Price | தென்னிந்தியாவின் இந்த பகுதியில் எரிபொருள் விலை மிக மலிவாக உள்ளது. அது எங்கு என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தென்னிந்தியாவின் இந்த பகுதியில் எரிபொருள் விலை மலிவாக உள்ளது. அது எங்கு என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்…
ஆந்திரப் பிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மற்ற மாநிலங்களை விட கணிசமாக குறைவாக இருக்கும் ஒரு தனித்துவமான இடம் உள்ளது. 32,000 மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் வெறும் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கிறது. அது ஏன் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆந்திராவில் தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.108 முதல் ரூ.110 வரையிலும், டீசல் விலை ரூ.96 முதல் ரூ.98 வரையிலும் உள்ளது. ஆனால், ஏனாமில் பெட்ரோல் வெறும் 96 ரூபாய்க்கும், டீசல் 86 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த விலை வேறுபாட்டிற்கான காரணங்களை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
Also Read: எனக்காக நான் வீடு கட்டவில்லை – டெல்லியில் பிரதமர் மோடி உருக்கமான பேச்சு
ஏனாமில் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறைவு?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக ஏனாம் இருக்கிறது. இதன் விளைவாக அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்துடன் ஒப்பிடும்போது கணிசமாக மலிவான எரிபொருள் அங்கு கிடைக்கிறது.
புத்தாண்டு முதல் விலை உயர்வு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகரிக்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு முடிவு செய்தது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்த துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்ந்து ரூ.96.25க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்ந்து ரூ.86.47க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
January 03, 2025 5:34 PM IST