இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
இந்த தீ விபத்திற்கு காரணம், PABஇன் பேட்டரி பேக்கில் இருந்து ஏற்பட்ட தீ என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது போன்ற தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, பேட்டரிகள் அல்லது மின் சாதனங்களை நீண்ட நேரம் சார்ஜ் செய்யாமல் இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.