செல்போன் உற்பத்தி குறித்து தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ரயில்வே மின்னணுவியல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது,
”2014 – 15ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட செல்போன்களில் 26% மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை. எஞ்சியவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை.
இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 32.5 கோடி முதல் 33 கோடி செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, சராசரியாக ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான செல்போன்கள் உற்பத்தியாகின்றன.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்போன்களில் 99.2% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. 2024ஆம் ஆண்டில் உள்நாட்டின் உற்பத்தி மதிப்பு ரூ. 4,22,000 கோடியாக உள்ளது. ஏற்றுமதி மதிப்பு ரூ. 1,29,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.