பட மூலாதாரம், AP
மருத்துவர்களுக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு
சீன நீதிமன்றம் ஒன்று பிரிட்டிஷ் மருந்துக் கம்பனி ஒன்றுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சுமார் அரை பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.
மருத்துவர்களுக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்தக் குற்றச்சாட்டில் க்ளாஸ்கோஸ்மைத்கிளைன் (GlaxoSmithKline) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் சிலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு-நாள் வழக்கு விசாரணை ஒன்றின் முடிவில், க்ளாஸ்கோஸ்மைத்கிளைன் மருந்துக் கம்பனியின் முன்னாள் சீன தலைமை அதிகாரி மார்க் ரீய்லி மற்றும் சில அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நடக்கும் தமது வர்த்தக நடவடிக்கைகளில் உள்ள பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக க்ளாஸ்கோஸ்மைத்கிளைன் நிறுவனம் கூறியுள்ளது.
க்ளாஸ்கோஸ்மைத்கிளைன் தயாரிப்புகளை வாங்குவதை தூண்டுவதற்காக பணமும் சொத்துக்களும் லஞ்சமாக வழங்க முன்வந்ததாக அந்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.