The post சிங்கப்பூரில் முறையான அனுமதி பெறாமல் இறைச்சிகளை பதுக்கி வைத்திருந்த பேக்கரி!! appeared first on SG Tamilan.
சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் 6, 2023 ஆம் ஆண்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சுவீட்ஸ் விற்கும் பேக்கரியில் 1500 கிலோவுக்கு அதிகமான இறைச்சி பொருட்களை குளிர்சாதன பெட்டியில் இருப்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது..
அதற்காக அவர் சிங்கப்பூர் அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை. அதனால் மார்ச் 13 – ஆம் தேதியன்று SFA ( சிங்கப்பூர் உணவு ஏஜென்சி ) பேக்கரி ஜின் தைக்கு $4000 அபராதம் விதித்தனர்.
எதற்காக அபராதம் விதித்தனர் என்றால், உரிமம் பெறாமல் இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவுகளை சேமிப்பது மிகவும் சட்டவிரோதமான செயல். அவை நிறைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினர்.
அதற்கான அனுமதி பெற்றால் மட்டுமே கடைகளை செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்.
இது போன்று சட்டவிரோதமாக வைத்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும் ,$ 10,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படும்.
The post சிங்கப்பூரில் முறையான அனுமதி பெறாமல் இறைச்சிகளை பதுக்கி வைத்திருந்த பேக்கரி!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin