Mobile Guardian விசாரணை நடத்தியதில், அந்த தளத்தை அங்கீகாரம் இல்லாமல் நுழைவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிய வந்தது.
முதற்கட்ட சோதனையில் 26 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13,000 மாணவர்களின் சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தளத்தில் உள்ள பயனர்களின் தகவல்களை அணுகியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இணைய ஊடுருவல் காரணமாக மாணவர்களின் சாதனங்களில் இருந்து Mobile Guardian செயலியை அகற்ற முடிவு செய்ததாக கல்வி அமைச்சகம் தெரிவித்தது.