9
முதலாவது லங்கா டி10 சுப்பர் லீக் தொடர் கண்டி பல்லேகல மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் 12 தொடக்கம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையின் வருடாந்த கிரிக்கெட் அட்டவணையின் புதிய தொடராக நடைபெறப்போகும் லங்கா டி10 சுப்பர் லீக் தொடரில் இலங்கை வீரர்களுடன் சர்வதேச நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் கொலம்போ ஸ்ட்ரைக்கஸ், கோல் மார்வல்ஸ், ஹம்பாந்தோட்ட பங்களா டைகர்ஸ், ஜப்னா டைட்டன்ஸ், கண்டி போல்ட்ஸ் மற்றும் நிகம்போ பிரேவ்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் ஏழு சர்வதேச வீரர்கள் உட்பட அதிகபட்சம் 17 மற்றும் குறைந்தது 15 வீரர்களைக் கொண்டிருக்கும். இந்தத் தொடருக்கான வீரர்கள் தெரிவு எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

