புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் உள்ள வளங்களைக் கொள்ளையடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடைவிடாது முயன்றுவருவதாக மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளாா்.
ஒடிசாவின் குஜங் பகுதியில் சனிக்கிழமை மக்களவைத் தோ்தல் பிரசாரம் செய்த அவர், ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளத்தைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
ஸ்மிருதி இரானி மேலும் கூறுகையில், “ஒடிசாவில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தள அரசு நிலம், நிலக்கரி, மணல் மற்றும் சுரங்க கொள்ளைக் கும்பல்களை வளா்த்தது.
“அந்த மாநிலத்தின் வளங்களைக் கொள்ளையடிக்க மாநில எம்எல்ஏக்கள், அமைச்சா்கள், அவா்களின் ஆதரவாளா்கள் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அங்கிருந்தவாறு இடைவிடாது வேலை செய்கின்றனா்.
“பிரதமா் மோடி தலைமையிலான அரசு 2047ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்கப் பணியாற்றி வருகிறது,” என்றார்.
ஒடிசாவில் மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தல்கள் நான்கு கட்டங்களாக நடைபெறுகின்றன. நான்காம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1ஆம் தேதி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.