இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி ஜனவரியில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அதிகபட்ச வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஸ்டீல்மின்ட் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் உருக்கு ஏற்றுமதி 11 லட்சம் டன்னாகப் பதிவாகியுள்ளது. இது, கடந்த 8 மாதங்கள் காணாத அதிபட்ச உருக்கு ஏற்றுமதியாகும். முந்தைய 2023 ஜனவரி மாதத்தில் நாட்டின் உருக்கு ஏற்றுமதி 6.7 லட்சம் டன்னாக இருந்தது.
இந்திய உருக்கு ஏற்றுமதியில் 67 சதவீதம் பங்கு வகிக்கும் ஐரோப்பிய யூனியனில் உருக்கு தேவை கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. இது, கடந்த ஜனவரி மாத ஏற்றுமதி வளா்ச்சிக்குக் கைகொடுத்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.