05
SSY கணக்கில் எவ்வளவு காலம் டெபாசிட் செய்ய முடியும் ? : 2019 இன் விதிகளின் படி, கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை SSY கணக்கில் டெபாசிட் செய்யலாம். SSY கணக்கைத் திறக்கும் தேதியின்படி 10 வயது நிரம்பாத பெண் குழந்தையின் பெயரில் பாதுகாவலர்/பெற்றோர் ஒருவரால் திறக்க முடியும்.உதாரணமாக, உங்கள் பெண் குழந்தைக்கு 9 வயதாக இருக்கும் போது, நீங்கள் ஒரு SSY கணக்கைத் திறந்தால், 15 ஆண்டுகளுக்கு, அதாவது 24 வயதை அடையும் வரை அந்தக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடையும். அதாவது, பெண் குழந்தைக்கு 9 வயதாக இருக்கும்போது கணக்கு தொடங்கப்பட்டால், கணக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும், அதாவது அந்த பெண்ணுக்கு 30 வயதை அடையும் போது முதிர்வு தொகையை பெறலாம்.