பட மூலாதாரம், a
இஸ்லாமியத் அரசின் தீவிரவாதிகள்
தீவிரவாத இஸ்லாமியக் குழுவான, இஸ்லாமிய அரசில் உறுப்பினராக இருந்ததற்காக, ஜெர்மனியப் பிரஜை ஒருவர் மீது பிரான்க்ஃபர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
க்ரெஷ்னிக் பெரிஷா எனும் அந்த நபர், கடந்த ஆண்டு சிரியாவுக்கு சென்று, ஐந்து மாதங்கள் அந்தக் குழுவுடன் இணைந்து போரிட்டார் என்று, அரசு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சிரியாவிலிருந்து திரும்பும்போது, கடந்த டிசம்பர் மாதம் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
எனினும் அவரது வழக்கறிஞரோ, அவர் மிகவும் அழுத்தத்தில் இருப்பதாகவும், அவருக்கு மருத்துவம் தேவை என்றும் கோரியுள்ளார்.
சிரியாவில் உள்நாட்டு போர் ஆரம்பித்த பிறகு, ஜெர்மனியிலிருந்து 400 க்கும் அதிகமானவர்கள், அந்த ஜிகாதிக் குழுவில் சேர்ந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.