நம் நாட்டில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதியாகும் மிகப்பெரிய ஏற்றுமதி பொருட்கள் பற்றிய விரிவான அறிக்கையை சமீபத்தில் இந்திய வர்த்தகத் துறை பகிர்ந்தது. அந்த அறிக்கையில், இந்த 2024 ஆம் ஆண்டில் Motor Gasoline விஞ்சி மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக நான்காவது இடத்தை ஸ்மார்ட் ஃபோன் பெற்றுள்ளது. அதாவது ஸ்மார்ட் ஃபோன்கள் 2024-ல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 4-வது பெரிய ஏற்றுமதி பொருளாக உள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட் ஃபோன் ஏற்றுமதி $15.6 பில்லியன் மதிப்புடன் சுமார் 42 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தியா இந்த FY24-ல், $13.4 பில்லியன் மதிப்பிலான motor gasoline-னுடன் ஒப்பிடுகையில், $15.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட் ஃபோன்களை ஏற்றுமதி செய்தது. முன்னதாக FY23-ல் இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி பொருளாக ஸ்மார்ட் ஃபோன்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்யவில்லை, ஆனால் இப்போது அவை நாட்டின் நான்காவது பெரிய ஏற்றுமதி பொருளாக மாறியுள்ளன. PLI (production-linked incentive) திட்டத்தின் காரணமாக ஸ்மார்ட் ஃபோன் ஏற்றுமதியில் இந்த வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட் ஃபோன் ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா இருக்கிறது.
இந்தியாவில் இருந்து 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை அமெரிக்கா கண்டிருக்கிறது. இது அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் சுமார் 158 சதவீதம் அதிகரிப்பாகும். அமெரிக்காவிற்குப் பிறகு, UA-க்கான ஸ்மார்ட் ஃபோன் ஏற்றுமதி $2.6 பில்லியனாகவும், நெதர்லாந்திற்கான ஏற்றுமதி மதிப்பு $1.2 பில்லியனாகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக நாட்டின் மொபைல் போன் உற்பத்தி FY24-ல் சுமார் 49.16 பில்லியன் டாலர்களை எட்டியது.
இதையும் படிங்க:
செல்போன் சார்ஜ் இப்படித்தான் போடணும்… மொபைல் நீண்ட காலம் உழைக்க முக்கிய டிப்ஸ்!
இந்த அளவானது கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகம் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கு பிறகு இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தி எவ்வாறு நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் பங்களிக்கிறது என்பதை இந்த தரவு காட்டுகிறது. PLI திட்டத்தின் காரணமாக சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தி நாடாக இந்தியா மாறி இருக்கிறது.
நம் நாட்டில் PLI திட்டத்தின் கீழ் Apple, Foxconn, Samsung மற்றும் பல நிறுவனங்கள் ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதே போல சீனா-பிளஸ்-ஒன் ஸ்ட்டாட்டர்ஜியில் PLI திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பல நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற PLI குறிப்பிடத்தக்க காரணமாக இருந்து வருகிறது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் டாப்-என்ட் மாடல்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில்இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதியில் ஆப்பிள் ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால் ICEA தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் ஏற்றுமதிகள் $14.39 பில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது FY23-ல் இருந்த ரூ 90,000 கோடியிலிருந்து 33% அதிகமாகும்.
.