அறுவை சிகிச்சை நடைபெறும் போது மருத்துவர்கள் பச்சை நிற ஆடை அணிவது ஏன் தெரியுமா?
வழமையாக மருத்துவர்கள் வெள்ளை நிற கோட் அணிவார்கள். ஆனால் பொதுவாக அறுவை சிகிச்சையின் போது, பச்சை நிற அங்கி அணிவார்கள். இதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
அறுவை சிகிச்சைகள் பொதுவாக தனியான அறையில் நடக்கும். மேலும், வெளிச்சம் நிறைந்த இடத்திலிருந்து இருண்ட அறைக்குள் நுழையும்போது பச்சை அல்லது நீல நிறம் பொருத்தமாக இருக்கும்.
இந்த விதியை தான் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் பயன்படுத்துகின்றனர். அதாவது, பச்சை மற்றும் நீல நிறங்கள் ஒளியின் நிறமாலையில் சிவப்பு நிறத்திற்கு எதிரே உள்ளது. இதனால்தான் பச்சை நிறத்திலான ஆடைகளை அவர்கள் அணிகிறார்கள்.
இதை சுருங்க சொல்வதென்றால், துணியின் பச்சை மற்றும் நீல நிறங்கள் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் பார்வை திறனை அதிகரிக்கின்றன.
மேலும், பச்சைத் துணி அறுவை சிகிச்சையின் போது கண்ணுக்கு சிறிது ஆறுதல் அளிக்கிறது. இது சிகப்பின் எதிரொலிப்பை தவிர்க்க உதவுகிறது. மேலும், உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணரின் நூலில் கூட பச்சை நிறத்தைப் பயன்படுத்துவது பற்றி கூறப்பட்டுள்ளது என மருத்துவர் ஒருவர் கூறினார்.
இதனால்தான், டாக்டர்கள் நீண்ட காலமாக நீலம் அல்லது பச்சை நிற சீருடைகளை அணிகின்றனர். இதற்கிடையில், கடந்த காலங்களில், மருத்துவர்கள் வெள்ளை ஆடை அணிந்துள்ளனர்.
மருத்துவர்களை பின்பற்றி அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் வெள்ளை சீருடை அணிந்துள்ளனர். இந்த முறையே, 1914ல் மருத்துவர் ஒருவர் மாற்றியுள்ளார். அவர்தான் அறுவை சிகிச்சையின் போது பச்சை ஆடை அணிய அறிவுறுத்தியுள்ளார்.
அன்றிலிருந்து அறுவை சிகிச்சையின் போது பச்சை ஆடை பிரபலமாகிவிட்டது. எனினும், தற்போது சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது நீல நிற ஆடை அணிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02