கேரளாவைச் சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி (42). 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் சுஜித் ஹென்றிக்கும், அலிஸ் பிரியங்காவுக்கும் (40) திருமணம் நடந்தது. இவர்களுக்கு நோவா, நெய்தன் ஆகிய இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். ஆனந்த் சுஜித் ஹென்றி அமெரிக்காவின் மெட்டா மற்றும் கூகுளில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகவும், அலிஸ் பிரியாங்கா ஐ.டி நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மெட்டாவிலிருந்து ஆனந்த் சுஜித் ஹென்றி ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சான் மேடியோ கவுண்டியில் குடிபெயர்ந்தார். இந்த நிலையில்தான், இந்திய வம்சாவளிக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பான காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, “இரண்டு குழந்தைகளும் படுக்கையறைக்குள்ளும், தம்பதி இருவரும் குளியலறையிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தனர்.